# பித்தனின் கவிதைகள் விற்று வாங்கும் கலை **Published by:** [Madhavan](https://paragraph.com/@madhavan/) **Published on:** 2022-06-28 **URL:** https://paragraph.com/@madhavan/Dv02IhvCeqowiLEwclWF ## Content வாங்கி விற்றல் செயலோடு எதிர் வினையாம் விற்று வாங்கல் திறன்தன்னை அறிந்தால் மட்டும் பிழைத்திடலாம் பங்கென்னும் போதைக் களம் தன்னில் நரைத்தலையோன் சொல்கின்றேன் நம்பு (வங்கிதரும் வட்டியைவிட சற்றே சம்பாதிக்கமுடிந்தால் வங்கி வர்த்தகத்தில் கில்லாடி என்று அர்த்தம். வங்கியில் முதலீடு, பங்கில் முதலீடு இரண்டையும் பல ஆண்டு வரைபடத்தோடு ஒப்பிட நமக்குக்கிடைக்கும் செய்தி இது. வங்கியைவிட பங்கில் செய்த முதலீடு லாபம் தந்தபோது அந்த லாபத்தில் 90 சதவீதத்திற்கு மேலெடுத்து வங்கியில் முதலீடு செய்வதே புத்திசாலித்தனம். இதற்கு வாங்கிய பங்கை விற்று மறுபடியும் இறங்குகையில் வாங்கும் கலையை கற்பது அவசியம். விற்ற பங்கு வாங்கமுடியாத அளவிற்கு ஏறிவிட்டால் அப்பங்கை மறந்துவிட்டு வேறொரு நல்ல பங்கில் லாபம் போக மீதியை முதலீடு செய்வது சிறந்த அணுகுமுறை.) ## Publication Information - [Madhavan](https://paragraph.com/@madhavan/): Publication homepage - [All Posts](https://paragraph.com/@madhavan/): More posts from this publication - [RSS Feed](https://api.paragraph.com/blogs/rss/@madhavan): Subscribe to updates